தொண்டு நிறுவனத்திடம் ஆதரவற்ற 2 பெண் குழந்தைகள் ஒப்படைப்பு

விழுப்புரம், ஜன. 12: மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை  உள்பட இரு குழந்தைகள் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டன. ÷விழுப்புரத்தை அடுத்த தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினாம்பாள் (5

விழுப்புரம், ஜன. 12: மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை  உள்பட இரு குழந்தைகள் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டன.

÷விழுப்புரத்தை அடுத்த தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரத்தினாம்பாள் (55) மகள் புட்லாயி என்பவர் மனவளர்ச்சி குன்றியவர். திருமணம் ஆகாத இவருக்கு ஜனவரி முதல் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

÷தாய் மனநிலை குன்றியவர் என்பதாலும், ரத்தினாம்பாள் வயதானவர் என்பதாலும் அந்த குழந்தையைப் பராமரிக்க இயலாது என்று அரசு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்க மாவட்ட சமூக நல அலுவலர் அமிர்தகெüரியிடம் ஒப்படைத்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிசாமியின் உத்தரவின் பேரில் அந்த குழந்தை சென்னை மகப்பேறு கலைச்செல்வி கருணாலயா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த செல்வி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

÷இதேபோல் செஞ்சியை அடுத்த மேலசெவலாம்பாடி, எய்யில் சந்திப்புச் சாலையில் தொப்புள் கொடியுடன் அனாதரவாக கிடந்த பெண் சிசுவை ஊராட்சி மன்றத் தலைவர் ரகுபதி, செஞ்சி வட்டாட்சியரிடம் 8-ம் தேதி ஒப்படைத்தார்.

÷அந்த குழந்தையும் அதே தொண்டு நிறுவனத்திடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com