நாணயங்கள் மாற்றும் முகாம்

காஞ்சிபுரம், ஜன. 12:    கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் இங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ÷ரிசர்வ் வங்கியின் பிளாட்டின விழாவை முன்னிட்டு, இந்தியன் வங்கியுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த விழ

காஞ்சிபுரம், ஜன. 12:    கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் இங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

÷ரிசர்வ் வங்கியின் பிளாட்டின விழாவை முன்னிட்டு, இந்தியன் வங்கியுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த விழாவுக்கு ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் டி. ரங்கநாதன் தலைமை வகித்தார்.

÷இந்தியன் வங்கின் பொது மேலாளர் வி.ஏ. சோமயாஜுலு, உதவி பொது மேலாளர்கள் என். சீனுவாசன், எஸ். கோபாலகிருஷ்ணன், எஸ். சடகோபன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். ரூ.10 லட்சம் மதிப்பிலான கிழிந்த நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளும், ரூ.5 லட்சம் மதிப்பிலான நாணயங்களும் வழங்கப்பட்டன. இவ் விழா சென்னை, புதுவை உள்பட 760 இந்தியன் வங்கிகளின் கிளைகளிலும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com