நாளை பெரியநாயகி அன்னை ஆலய கொடியேற்று விழா

விருத்தாசலம், ஜன. 12: விருத்தாசலத்தை அடுத்த கோணான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் கொடியேற்றத் திருவிழா வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ÷விருத்தாசலத்தை அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் வீரமா

விருத்தாசலம், ஜன. 12: விருத்தாசலத்தை அடுத்த கோணான்குப்பம் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் கொடியேற்றத் திருவிழா வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

÷விருத்தாசலத்தை அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் வீரமாமுனிவரால் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புனித பெரியநாயகி அன்னை ஆலயம் உள்ளது. ÷இதில் ஆண்டுதோறும் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் திருவிழா  நடைபெறும்.

÷கடலூர் மற்றும் புதுச்சேரி மறை மாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி தலைமையில் 14-ம் தேதி (வியாழன்கிழமை) மாலை 5-மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கும்.

÷மேலும் வரும் 22-ஆம் தேதி வரை திருப்பலிநற்கருணை, தேர்பவனி ஆராதனை உள்ளிட்ட விழாக்கள் நடைபெறும்.

÷விழாவின் முக்கிய நிகழ்வான கூட்டுத்திருப்பலி, ஆடம்பர தேர்பவனி ஆகியன 23-ம் தேதி இரவு பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் மதவேறுபாடு இன்றி பக்தர்கள் கலந்து கொள்வர்.

÷வரும் 24-ம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com