பத்மாலயத்தில் திருப்பாவை விழா

நெய்வேலி, ஜன. 12: மந்தாரக்குப்பத்தில் உள்ள பத்மாலயத்தில் 12-ம் ஆண்டு திருப்பாவை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ÷திருப்பாவை கூட்டு வழிபாட்டுக்கு பத்மாலயத்தின் செயலர் ஜி.சீதாராமன் தலைமை வகித்தார். பத்

நெய்வேலி, ஜன. 12: மந்தாரக்குப்பத்தில் உள்ள பத்மாலயத்தில் 12-ம் ஆண்டு திருப்பாவை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

÷திருப்பாவை கூட்டு வழிபாட்டுக்கு பத்மாலயத்தின் செயலர் ஜி.சீதாராமன் தலைமை வகித்தார். பத்மாலய நற்பணி மன்ற உறுப்பினர்களும், மாணவ,மாணவிகளும் இணைந்து திருப்பாவை பாசுரங்களைப் பாடினர்.

÷அதைத் தொடர்ந்து நடைபெற்ற திருப்பாவை பாசுர இசைப்போட்டி மற்றும் வினாடி-வினா போட்டிகளுக்கு தமிழாசிரியை ப்ரியா நடுவராக இருந்து பரிசுக்குரிய மாணவர்களை தேர்வு செய்தார்.

÷இதில் நெய்வேலி ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவி கோபிநந்தினி முதல் பரிசையும்,புனித இருதய மெட்ரிக் பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவி சந்தியா 2-ம் பரிசையும்,மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவன் ஜாகீர்உசேன் 3-ம் பரிசையும் பெற்றனர்.

÷வினாடி-வினா போட்டியில் என்எல்சி மேல்நிலைப் பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவன் ஜெயப்பிரகாஷ் முதல் பரிசையும், அதே பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் பிரியதர்ஷன் 2-ம் பரிசையும், 10-ம் வகுப்பு மாணவன் வசந்தகுமார் 3-ம் பரிசையும் பெற்றனர்.

÷இதைத் தொடர்ந்து பத்மாலயத்தின் 19-வது இலவச நூல் வெளியீடான "சங்கத் தமிழ் மாலை' எனும் நூலை சுப்புலட்சுமிமுத்தையன் வெளியிட ஜி.சீதாராமன் பெற்றுக் கொண்டார் (படம்).

மங்கள தீபாராதனை,சாற்றுமறை மற்றும் பிரசாத விநியோகத்துடன் விழா முடிவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com