பள்ளி அருகே பிடிபட்ட மலைப் பாம்புகள்

திருவள்ளூர், ஜன. 12:   திருவள்ளூர் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே வந்த இரண்டு மலைப்பாம்புகளை பொதுமக்கள் பிடித்து தீயணைப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். ÷திருவள்ளூரை அடுத்துள்ள அயத்தூர் கிராமத்

திருவள்ளூர், ஜன. 12:   திருவள்ளூர் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி அருகே வந்த இரண்டு மலைப்பாம்புகளை பொதுமக்கள் பிடித்து தீயணைப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

÷திருவள்ளூரை அடுத்துள்ள அயத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஒன்று உள்ளது பள்ளியின் சுற்றுச் சுவர் அருகே செவ்வாய்கிழமை காலை மலைப் பாம்பு ஒன்று செல்வதைப் பார்த்த பள்ளி மாணவர்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். இதையடுத்து, கிராம பொதுமக்கள் வனத் துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், பொதுமக்கள் 6 அடி நீளமுள்ள ஒரு மலைப் பாம்பை பிடித்தனர். அப்போது புதரில் இருந்து மற்றொரு மலைப்பாம்பு சீறிக் கிளம்பியது. அதை பொதுமக்கள் பிடிக்க முயன்ற போது அப்பகுதியில் உள்ள வாசுதேவன் என்பவரது வயல்வெளியில் உள்ள கிணற்றில் பாம்பு விழுந்தது.

÷இதனிடையே அங்கு வந்த தீ அணைப்புப் படையினர் கிணற்றில் விழுந்த 5 அடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர்.

பின்னர், இரண்டு பாம்புகளையும் பிடித்து வந்து வனப்பகுதியில் விட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com