பஸ் டிரைவர் கொலை வழக்கில் 4 இளைஞர்கள் கைது

புதுச்சேரி, ஜன. 12: பாகூரைச் சேர்ந்த பஸ் டிரைவர் பாலமுருகன் (31) கொலை வழக்கில் தொடர்புடைய 4 இளைஞர்களை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பாகூர் பாலமுருகன் கடந்த 7-ம் தேதி கிருமாம்பாக்கம் ஏரியில்

புதுச்சேரி, ஜன. 12: பாகூரைச் சேர்ந்த பஸ் டிரைவர் பாலமுருகன் (31) கொலை வழக்கில் தொடர்புடைய 4 இளைஞர்களை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பாகூர் பாலமுருகன் கடந்த 7-ம் தேதி கிருமாம்பாக்கம் ஏரியில் தலையில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். பிரேதத்தை கைப்பற்றி பாகூர் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையிலான போலீஸôர் விசாரணை நடத்தி வந்தனர்.

கிருபா என்ற பெண்ணுடன் பாலமுருகன் பழகியுள்ளார். இதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணம் செய்த பெண்ணிடம் கிருபாவின் வீட்டார் பாலமுருகன் ஏற்கெனவே கிருபாவுடன் பழகியதை தெரிவித்துள்ளனர். அதனால் பாலமுருகனின் மனைவி விவாகரத்துக்கு முறையிட்டுள்ளார்.

மனைவியை பிரித்ததால் கிருபாவின் திருமணத்திற்கு பாலமுருகன் தடையாக இருந்துள்ளார். அதனால் ஆத்திரமுற்ற கிருபாவின் சகோதரன் குடியிருப்புபாளையம் ரஞ்சித் (20) மற்றும் உருவையாறு ஜெகன் (20), குருசுகுப்பம் தினேஷ் (21), ஞானவேல் (20) ஆகியோர் பாலமுருகனை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீஸôர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com