புகையில்லா போகியை வலியுறுத்தி பேரணி

திண்டிவனம். ஜன. 12: திண்டிவனம் காந்திசிலை அருகில் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் புகையில்லாமல் போகிப் பண்டிகையைக் கொண்டாட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்பட்டது. ÷காந

திண்டிவனம். ஜன. 12: திண்டிவனம் காந்திசிலை அருகில் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் புகையில்லாமல் போகிப் பண்டிகையைக் கொண்டாட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்பட்டது.

÷காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணி நேரு வீதி வழியாக சென்று அரசு விரைவுப் பேருந்து நிலையத்தை சென்றடைந்தது. பேரணிக்கு வன்னியர் அறக்கட்டளையின் இயக்குனர் அரிநாராயணன் தலைமை தாங்கினார். கல்லூரி மாணவர்கள் ஆலோசகர் பிரான்சிஸ் துவக்கி வைத்தார். விளையாட்டு துணை இயக்குனர் சேகர் முன்னிலை வகித்தார்.

÷பேரணியில் சென்ற மாணவர்கள் போகி பண்டிகையை சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் கொண்டாட பொதுமக்களை வலியுறுத்தினர். பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com