மகளிர் குழுவுக்கு மணிமேகலை விருது

கும்மிடிப்பூண்டி, ஜன. 12: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இயங்கிவரும் கலைவாணி மகளிர் சுய உதவிக் குழு மாவட்ட அளவில் சிறந்த மகளிர் குழுவாக தேர்ந்தெடுக்கப்பட்டு மணிமேகலை விருதை பெற்றிருக்கிறது

கும்மிடிப்பூண்டி, ஜன. 12: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இயங்கிவரும் கலைவாணி மகளிர் சுய உதவிக் குழு மாவட்ட அளவில் சிறந்த மகளிர் குழுவாக தேர்ந்தெடுக்கப்பட்டு மணிமேகலை விருதை பெற்றிருக்கிறது.

÷தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் மகளிர் குழுக்களை மாவட்ட அளவில் தேர்ந்தெடுத்து அந்த குழுவிற்கு மணிமேகலை விருது சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு தொகையை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

÷இதன்படி, 2008-09-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுக்கு கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கலைவாணி மகளிர் சுய உதவிக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இந்த விருதுக்கான சான்றிதழையும்,பரிசுத் தொகையாக ரூ. 10 ஆயிரம் அடங்கிய காசோலையையும் கும்மிடிப்பூண்டி கலைவாணி மகளிர் குழுவின் ஊக்குநர் நாகபூஷணம், பிரதிநிதிகள் புனிதா, சகிலா ஆகியோரிடம்  மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வழங்கினார்.

÷இதையடுத்து, கலைவாணி மகளிர் குழு உறுப்பினர்கள் திருவள்ளூர் எம்.எல்.ஏ.வான  இ.ஏ.பி. சிவாஜியை கடந்த சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவி புனிதவள்ளி வெங்கடாசலபதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சித் தலைவர் கே.என். பாஸகர், கும்மிடிப்பூண்டி தி.மு.க. செயலர் வெங்கடாசலபதி ஆகியோர் உடனிருந்தனர்.

÷கலைவாணி மகளிர் குழு கும்மிடிப்பூண்டி பகுதிகளில் மகளிர்களின் மேம்பாட்டுக்கு பாடுபடுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com