மதுவிலக்கு கோரி கையெழுத்து இயக்கம்

கடலூர், ஜன.12:  இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு,தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, கடலூரில் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. ÷இளைஞர்கள் தினத்தைக் கொண்டாடும் வகையில

கடலூர், ஜன.12:  இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு,தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, கடலூரில் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

÷இளைஞர்கள் தினத்தைக் கொண்டாடும் வகையில் கடலூர் "கருணை விழிகள்' என்ற பொதுநல அமைப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பிரசார முகாம் ஒன்றை தொடங்கியது. இதில் இளைஞர்கள் மது மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகக் கூடாது, தாய் தந்தையரைக் இறுதிகாலம் வரை நேசிக்க வேண்டும், சேவை மனப்பான்மையுடன் தங்கள் பகுதி மக்களின் குறைகளை அரசுக்கு உரிய முறையில் இளைஞர்கள் தெரிவிக்க வேண்டும்.

÷லஞ்சம், ஊழல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும், அரசு வேலைவாய்ப்பை நம்பி இருக்காமல் சுயதொழில் செய்ய வேண்டும் என்ற 10 அம்சக் கொள்கைகளை இளைஞர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுமாறு பிரசாரம் செய்தனர்.

÷தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, கையெழுத்து இயக்கம் தொடங்கினர். "கருணை விழிகள்' அறக்கட்டளை தலைவர் ஆர்.முருகன் மற்றும் நிர்வாகிகள் ஆர்.தர்மதணிகைவேல், சண்முகம், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து

கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com