ராஜாதேசிங்கு பிறந்தநாள் விழா: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

விழுப்புரம், ஜன. 12: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்த மன்னர் ராஜாதேசிங்குவின் பிறந்தநாள் விழாவை ஜனவரி மூன்றாவது வாரத்தில் அரசு சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோச

விழுப்புரம், ஜன. 12: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஆட்சி செய்த மன்னர் ராஜாதேசிங்குவின் பிறந்தநாள் விழாவை ஜனவரி மூன்றாவது வாரத்தில் அரசு சார்பில் சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஆர்.பழனிசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

÷செஞ்சிக் கோட்டையில் நடைபெற உள்ள இவ்விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொள்கிறார்.

இதையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசளிப்பது என்றும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

÷விழாவை முன்னிட்டு செஞ்சிக்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

÷இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலாத் துறை அலுவலர் இளங்கோவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.பழனிசாமி, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சைமணி, கலை பண்பாட்டுத் துறை அரசு இசைப்பள்ளி தலைமையாசிரியை சூடாமணி ராமகிருஷ்ணன், தொல்பொருள் ஆய்வுத் துறை அலுவலர் ஜெயகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com