ரூ.80 லட்சத்தில் இலவச துணிகள்

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மீனவர்களுக்கு ரூ. 80 லட்சம் செலவில் இலவசமாக துணிகள் வழங்கப்படுகிறது. இந்த உதவியை முதல்வர் வி.வைத்திலிங்கம் (படம்) தொடங்கி வைத்தார். இது குறித்து முத

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மீனவர்களுக்கு ரூ. 80 லட்சம் செலவில் இலவசமாக துணிகள் வழங்கப்படுகிறது. இந்த உதவியை முதல்வர் வி.வைத்திலிங்கம் (படம்) தொடங்கி வைத்தார்.

இது குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் இயற்கை சீற்றத்தின்போது மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் இலவச கைத்தறி புடவை,  கைலி மற்றும் துண்டு வழங்கி வருகிறது. மீனவர்களின் கோரிக்கையின்படி பாலியஸ்டர் புடவை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி முதன் முறையாக மீனவர்களுக்கு ஒரு பாலியஸ்டர் புடவையும், ஒரு கைத்தறி கைலி மற்றும் ஒரு துண்டும் வழங்கப்பட்டது. ஒரு செட் துணியின் மதிப்பு ரூ. 352 ஆகும். 19,730 மீனவ குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இலவச துணிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி முன்லை வகித்தார். மீனவர் நலத்துறை இயக்குநர் ஜி. ராமலட்சுமி, துணை இயக்குநர் கு.தெய்வசிகாமணி, உதவி இயக்குநர் இரா. செüந்தரபாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com