விரைவில் புதுச்சேரி-தில்லி விரைவு ரயில்

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரி - தில்லி இடையே புதிய ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி கூறினார். ÷புதுச்சேரி- காக்கிந

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரி - தில்லி இடையே புதிய ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய திட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி கூறினார்.

÷புதுச்சேரி- காக்கிநாடா, புதுச்சேரி- சென்னை சதாப்தி, காரைக்கால்- சென்னை போன்ற தடங்களிலும் ரயில்கள் இயக்கும் திட்டமும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

÷புதுச்சேரி- மங்களூர் சென்ட்ரல் இடையிலான வாராந்திர அதிவேக விரைவு ரயில் தொடக்க விழா புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர் மேலும் கூறியது:

÷புதுச்சேரி, தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகியவற்றை இணைக்கும் இந்த சிறப்பான வாராந்திர ரயில் ஜனவரி 12 முதல் இயங்குகிறது. இது வாரம் 3 முறையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு செய்யவேண்டும் எனில்  முதல் ஆறுமாத காலம் இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை, முன்பதிவு விவரங்கள் கண்காணிக்கப்படும். அதனைப் பொறுத்து கூடுதலாக இயக்க முடியும். அதனால் இந்த ரயிலில் அதிக மக்கள் பயணம் செய்யவேண்டும். வருவாய் இல்லாதபட்சத்தில் இந்த ரயிலையும் நிறுத்தும் நிலை உருவாகும். அந்த நிலை ஏற்படவிடக் கூடாது. இந்த ரயிலை இயக்குவதன் மூலம்  25 கால கனவு நிறைவேறுகிறது என்றார்.

÷முதல்வர் வி.வைத்திலிங்கம் பேசுகையில், இந்த ரயில் கிழக்கு கடற்கரையையும், மேற்கு கடற்கரையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது. இந்த ரயில் மூலம் மாஹே கூப்பிடும் தூரத்தில் உள்ளது போன்ற உணர்வு தோன்றுகிறது என்றார்.

÷சட்டப்பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சி பல மாநிலங்களோடு தொடர்பை ஏற்படுத்துவதன் மூலமே உருவாகிறது. அப்பணியை இந்த ரயில் செய்கிறது என்றார்.

÷உள்துறை அமைச்சர் வல்சராஜ் பேசுகையில், புதுச்சேரியில் வாழும் தென் மாநிலத்தவர்கள் மற்றும் புதுச்சேரி வர விரும்பும் வட மாநிலத்தவர்களுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாகும். மாஹேயில் அறிமுகம் செய்யப்பட்ட பிஎஸ்என்எல் 3ஜி சேவை புதுவையிலும் இன்று செயல்படுத்தப்பட்டு இருந்தால் இந்த நாள் ஒரு சிறப்பான நாளாக இருந்திருக்கும் என்றார்.

÷சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ஸ்ரீதரன், செய்தி மக்கள் விளம்பரத்துறை செயலர் ஹாகே கோஜீன், பொது சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம், மக்களவை உறுப்பினர் ப.கண்ணன், புதுச்சேரி நகர்மன்றத் தலைவர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com