9 ஊராட்சிகளுக்கு நிர்மல் புரஸ்கார் விருது

காஞ்சிபுரம், ஜன. 12:   காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஊராட்சிகளுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துக்கான நிர்மல் புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. மத்திய அரசு சுகாதாரத்தை சிறப்பாக வைத்திருக்கும் ஊராட்சிக

காஞ்சிபுரம், ஜன. 12:   காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஊராட்சிகளுக்கு மத்திய அரசின் சுகாதாரத்துக்கான நிர்மல் புரஸ்கார் விருது கிடைத்துள்ளது.

மத்திய அரசு சுகாதாரத்தை சிறப்பாக வைத்திருக்கும் ஊராட்சிகளுக்கு நிர்மல் புரஸ்கார் விருதை வழங்கி கெüரவித்து வருகிறது. இதற்காக மத்திய அரசு சிறப்பு குழுக்களை அமைத்து அக் குழுக்கள் கிராமங்களை பார்வையிட்டு இவ் விருத்துக்கு பரிந்துரை செய்யும். அதன்படி இவ் விருது வழங்கப்படும்.

2009-10-ம் ஆண்டுக்கான விருதுகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகள் விவரம் (அடைப்புக் குறிக்குள் ஊராட்சித் தலைவர் பெயர்):

அவளூர் (கி. குமார்), பெரிய பணிச்சேரி (கோ. உதயசூரியன்), சேத்துப்பட்டு (கே. சங்கர்), திருவஞ்சேரி (வே. ஜானகிராமன்), விட்டிலாபுரம் (கே. சகாதேவன்), சோத்துப்பாக்கம் (வே. ரேவதி), களியாண்பூண்டி (ஜி. சுந்தரம்), கட்டியாம்பந்தல் (ஓ. ரவி), குருமஞ்சேரி (சி. ரமேஷ்).

நிர்மல் புரஸ்கார் விருதுகளுக்கு தேர்வுசெய்யப்பட்ட  ஊராட்சித் தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே. மிஸ்ரா பாராட்டு தெரிவித்தார்.

மற்ற ஊராட்சிகளும் இதேபோல் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி அடுத்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுதல் ஊராட்சிகள் நிர்மல் புரஸ்கார் விருதுபெற வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com