சுடச்சுட

    

    கிராமிய உடுக்கை, பம்பை, நாட்டுப்புற கலைஞர்கள் சங்கக் கூட்டம்

    Published on : 20th September 2012 06:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செஞ்சி, செப். 29: செஞ்சி வட்ட கிராமிய உடுக்கை, பம்பை, கைச்சிலம்பு, கரகாட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க பேரவை கூட்டம் செஞ்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

    ÷நாட்டுப்புற கலைஞர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத்தர மாவட்ட ஆட்சியர் ஆவன செய்யவேண்டும். அக்டோபர் 13-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ர.தவமணியின் வேண்டுகோளை ஏற்று திரளாக கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

    ÷சங்க முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது. ÷கூட்டத்துக்கு சங்கத் தலைவர் அ.சுந்தரேசன் தலைமை தாங்கினார். கௌரவத் தலைவர் து.கன்னியப்பன் முன்னிலை வகித்தார். செயலர் அ.தணிகாசலம் வரவேற்றார். பொருளர் திரிசங்கு நன்றி

    கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai