சிதம்பரம், ஜன. 1: சிதம்பரம் ஜீவா புத்தக நிலையம் சார்பில் தெற்குரதவீதியில் அறுபத்துமூவர் நாயன்மார் மடத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ÷கண்காட்சியில் சிறுவர்களுக்கான நூல்கள், கணினி நூலகள், மகளிருக்கான நூல்கள், சமையல்கலை நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான மக்கள் கண்காட்சியில் பங்கேற்றனர்.
÷சிதம்பரம் டி.எஸ்.பி. ச.சிவனேசன் தலைமை வகித்து புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஜீவா புத்தக நிலைய நிர்வாக இயக்குநர் ஜீவா விஸ்வநாதன் வரவேற்றார். பேராசிரியர் வி.நடனசபாபதி, காமராஜர் பேரவைத் தலைவர் லட்சுமணன், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன், தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் மா.கோ.தேவராசன், மணிபாரதி பதிப்பகம் உரிமையாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.