10 ஆண்டுகளாகச் செயல்பாடின்றி கிடக்கும் பால் சேகரிப்பு நிலையம்

திருக்கோவிலூர், ஜன. 1: திருக்கோவிலூர் அருகே சுமார் 10 ஆண்டுகளாக கேட்பாரற்ற நிலையில் செயல்பாடின்றி கிடக்கும் கூட்டுறவு பால் சேகரிப்பு நிலையத்தை மீண்டும் இயக்கிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள
Published on
Updated on
1 min read

திருக்கோவிலூர், ஜன. 1: திருக்கோவிலூர் அருகே சுமார் 10 ஆண்டுகளாக கேட்பாரற்ற நிலையில் செயல்பாடின்றி கிடக்கும் கூட்டுறவு பால் சேகரிப்பு நிலையத்தை மீண்டும் இயக்கிட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 திருக்கோவிலூரை அடுத்த செங்கனாங்கொல்லை கிராமத்தில் சுமார் 3,000 பேர் வசித்து வருகின்றனர்.

 இக்கிராமத்தில் 1995-96-ம் ஆண்டு ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பால் சேகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. 1998 ஜனவரி 29-ம் தேதி இதன் திறப்பு விழா நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சிவராஜ் திறந்து வைத்தார்.

 இந்நிலையம் சுமார் ஓராண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்ட இந்த பால் சேகரிப்பு நிலையம், நிர்வாக வரவு செலவு கணக்கில் முறைகேடு நடந்ததாகக்கூறி இழுத்து மூடப்பட்டது. பின் இதை திறப்பதற்கு இன்றுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.

 இதனால் தற்போது இக்கிராமத்தைச் சேர்ந்த சிலரின் சொந்த பயன்பாட்டில் இருந்துவரும் இக்கட்டடம் சமூக விரோத செயல்பாட்டின் கூடாரமாகவும் மாறியுள்ளது.

 பெரும் விவசாயப் பகுதியான இக்கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கறவை மாடுகள் வளர்க்கப்பட்டு மேற்கண்ட கூட்டுறவு பால் சேகரிப்பு நிலையத்தில் பால் விற்பனை செய்துவந்தனர்.

 சுமார் 10 ஆண்டுகளாக இந்நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது சில தனியார் பால் சேகரிப்பு நிலையத்திடம் மிகவும் குறைந்த விலைக்கு இவர்கள் பால் விற்பனை செய்து வருகின்றனர்.

 இருந்தும்கூட அரசு சார்பில் இயங்கிய பால் சேகரிப்பு நிலையத்தில் இலவச கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் குறைந்த விலையில் வழங்கப்பட்ட மாட்டுத் தீவனம் தனியாரிடம் பெற முடியாமல் இவர்கள் தவிக்கின்றனர்.

 எனவே செயல்பாடின்றி கேட்பாரற்றுக் கிடக்கும் அரசு பால் சேகரிப்பு நிலையத்தை மீண்டும் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால் பரவாயில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com