திருத்தணி, ஜன. 22: பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த வழக்கில் கைது செய்த இளைஞர்கள் 10 பேரை விடுவிக்கக் கோரி, பூனிமாங்காடு கிராம மக்கள் திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
÷திருத்தணி அடுத்துள்ள கொல்லகுப்பம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளை பூனிமாங்காடு காலனியை சேர்ந்த ராஜசேகர், பார்த்திபன் ஆகியோர் கிண்டல் செய்தனர்.
இதையடுத்து திருத்தணி போலீஸôôர் வழக்குப் பதிவு செய்து பூனிமாங்காடு காலனியை சேர்ந்த 10 இளைஞர்கள் கைது செய்து, மேலும் 5 பேரை தேடி வந்தனர்.
÷இந்நிலையில் கைது செய்த இளைஞர்களை விடுவிக்கக் கோரி பூனிமாங்காடு காலனி சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் புகார் மனுவினை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் ராஜனிடம் வழங்கினர்.