திருவள்ளூர், ஜன. 22: சத்தரையில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் 3 கி.மீ. தூர சாலை இருளில் மூழ்கியுள்ளதால் பாம்புகள் பயத்திலும், சமூக விரோதிகள் பயத்திலும் கிராம மக்கள் அஞ்சுகின்றனர்.
÷திருவள்ளூரில் இருந்து கடம்பத்தூர் வழியாக பேரம்பாக்கம் செல்ல சத்தரை கூட்டுச் சாலையில் இருந்து 3 கி.மீ. கிளை சாலையில் செல்ல வேண்டும்.
அந்த கிளைச் சாலை ஒருவழிப்பாதையாக உள்ளது.
மேலும் சாலையின் இருபுறங்களிலும் வயல்வெளி மற்றும் முள் புதர்கள் உள்ளதால் காலை முதல் இரவு வரை பாம்புகள் சாதாரணமாக சாலையை கடக்கும்.
இரவு நேரத்தில் இன்னும் அதிகமாக பாம்புகள் சாலையை கடக்கும்.
÷சத்தரை கூட்டுச் சாலையில் இருந்து பேரம்பாக்கம் செல்ல இரவு 10 மணிக்கு மேல் வாகனங்கள் கிடையாது.
இதனால் பேரம்பாக்கத்தில் இருந்து சத்தரை, புதுமாவிலங்கை, கொண்டஞ்சேரி ஆகிய கிராமங்களுக்கு வரும் மக்கள் நடந்து அல்லது சைக்கிளில் செல்ல வேண்டிய நிலை
உள்ளது.
மேலும் பேரம்பாக்கம், இருளஞ்சேரி, பேரம்பாக்கம் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சத்தரை பகுதிக்கு வர வேண்டும் என்றாலும் நடந்து வர வேண்டிய சூழல் உள்ளது.
÷இச்சாலையில் வழிநெடுகிலும் தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் இருளில் மூழ்கி
யுள்ளது.
இதனால் கிராம மக்கள் அச்சாலையில் பாம்புகள் பயத்திலேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள சுடுகாடு அருகே மர்ம நபர்கள் சிலர் அமர்ந்து சீட்டாடுவதும், மது அருந்துவதும், போவோர் வருவோரை கிண்டல் செய்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனாலும் இரவு நேரத்தில் அச்சாலையை கடக்க அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
÷எனவே பேரம்பாக்கம் மற்றும் புதுமாவிலங்கை, சத்தரை ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து 3 கி.மீ. தூர சாலையில் மின் விளக்குகள் அமைக்கவும், இரவு நேரத்தில் அச்சாலையில் போலீஸôர் ரோந்துப் பணிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.