புதுச்சேரி, ஜன. 22: தேசிய மாணவர் படை (என்.சி.சி.) ஒருங்கிணைந்த ஆண்டு முகாமில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.
÷லாஸ்பேட்டை என்.சி.சி. வளாகத்தில் 10 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்த மாணவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் நடந்து வருகின்றன. இதையொட்டி துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடந்தது.
÷முகாமில் புதுச்சேரி, யேனம், மாஹே பகுதிகளில் இருந்து 733 மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமை கர்னல் தேவேந்தர் சிங் அமைப்பாளராக இருந்து நடத்துகிறார்.
÷கூடாரங்களில் கூடி வாழ்தல், நன்னடத்தை ஆகிய நற்பண்புகளை வளர்த்தல், ஒற்றுமை, நல்லொழுக்கம் ஆகிய நற்குணங்களை உருவாக்குதல், தலைமை உணர்வு, தோழமை உணர்வு, போட்டி மனப்பான்மை ஆகியவற்றை ஏற்படுத்துதல், புதுதில்லியில் ஜனவரி 2012-ல் நடைபெறும் குடியரசு அரசு விழாவில் கலந்து கொள்ள படையினரைத் தேர்வு செய்தல்.
÷முப்படையில் சேர படையினரிடம் ஆர்வத்தை உருவாக்குதல், உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள், தடை தாண்டுதல், சமூகப் பணிகள், முதலுதவி, எய்ட்ஸ் விழிப்புணர்வு, மருத்துவம், ஆரோக்கியம், சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள், தொடர் சொற்பொழிவுகள், இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.