உளுந்தூர்பேட்டை, ஜன. 22: இந்திரா தேசிய ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் நல உதவித்தொகை பெறுவதற்கான சிறப்பு ஆய்வு முகாம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
÷முகாமுக்கு, சமூக நல பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பாவாடை தலைமை வகித்தார்.÷சமூக நல தனி வட்டாட்சியர் டெய்சி சம்பூரணம் வரவேற்றார். முகாமில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் ஊனத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்து கொண்டனர்.
÷அவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை கோட்டாட்சியர் வரலட்சுமி ஆய்வு செய்து பெற்றுக் கொண்டார்.
÷இம்முகாமில் மருத்துவர்கள் கணேஷ், ராஜவிநாயகம் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை ஆய்வு செய்து ஊனத்தின் தன்மையை பதிவு செய்தனர். இதில் வட்டாட்சியர் என்.வேலாயுதன் பிள்ளை, துணை வட்டாட்சியர் செல்வராஜ் உள்பட வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.