காஞ்சிபுரம், ஜன. 22: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குச் சாவடி முகவர்களை உடனடியாக நியமிப்பது என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு முடிவு செய்துள்ளது.
÷விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
÷இக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் விடுதலைச் செழியன் தலைமை தாங்கினார்.
÷கிராமங்கள்தோறும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கு உறுப்பினர்களை சேர்ப்பது, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளையும் முறையாக ஆய்வு செய்து அங்கு வாக்குச் சாவடிகளுக்கு முகவர்களை நியமிப்பது உள்பட பல்வேறு முடிகள் எடுக்கப்பட்டன.