தொழிலாளர்களிடையே மோதல்

கடலூர், ஜன. 29:  கடலூர் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் சனிக்கிழமை தொழிலாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அரசு அளித்த ஊதிய உயர்வு குறித்து அதிருப்தி அடைந்த, 6 தொழிற்சங்
Published on
Updated on
1 min read

கடலூர், ஜன. 29:  கடலூர் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் சனிக்கிழமை தொழிலாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அரசு அளித்த ஊதிய உயர்வு குறித்து அதிருப்தி அடைந்த, 6 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், கடந்த 27-ம் தேதி வேலை நிறுத்தம் செய்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை வேலைக்கு வந்த தாற்காலிக பஸ் தொழிலாளர்கள் 12 பேரை வேலைக்கு வரவேண்டாம் என்று நிர்வாகம் கூறிவிட்டதாம்.

மேலும் நிரந்தரத் தொழிலாளர்கள் சிலர் பதவி இறக்கம் செயயப்பட்டு உள்ளனராம். இதற்குக் கண்டனம் தெரிவித்து, சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர், பொதுச் செயலர் பாஸ்கரன் தலைமையில், சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மறியல் போராட்டம் போராட்டம் நடத்தினர்.

பணிமனையின் பிரதான வாயில் கேட்டை மூடிவிட்டு, அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அதை அறிந்த தொ.மு.ச. தொழிற்சங்கத்தினர் விரைந்து வந்து, மூடப்பட்டு இருந்த  கேட்டை திறக்க முயன்றனர்.

இதனால் அவர்களுக்கும் மோதலும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com