கடலூர், ஜன. 29: இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் நீத்த, முத்துக்குமாரின் நினைவு தினம் கடலூரில் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தது. கடலூர் மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலை அருகே நடந்த இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமாரின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு, தமிழ் தேசிய விடுதலைப் பேரவை மாநில துணைச் செயலர் திருமார்பன் தலைமை வகித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலர் சு.திருமாறன், கடலூர் நகராட்சி துணைத் தலைவர் தாமரைச் செல்வன், மற்றும் கட்சி நிர்வாகிகள் அறிவுடைநம்பி, ரகு, புரட்சிவேந்தன், காத்தவராயன், முரளி, அருண், மு.கிட்டு, அறிவுக்கரசு, பைலட் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.