சிதம்பரம், ஜூலை 3: தமிழக கோயில்களில் அரசியல்வாதிகள் அல்லாது ஆன்மிக பெரியார்களையும், இறை நம்பிக்கை உள்ளவர்களையும் அறங்காவலர் குழுவில் நியமனம் செய்ய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய செங்குந்தர் முன்னேற்றப் பேரவை கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
÷சிதம்பரத்தில் அப்பேரவையின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
÷சமச்சீர் கல்வியை திறமையுள்ள சான்றோர்களை கொண்டு அக்கல்வி உலகளவில் சிறந்து விளங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ள முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.
தமிழ்பெருங்கடல், முருகபக்தர் கிருபானந்த வாரியார் திருவுருவச் சிலையை சென்னையில் முக்கிய இடத்தில் நிறுவ கோருவது.
சிதம்பரம் நகராட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய பாதாள சாக்கடை விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த கோருவது, சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்துக்கு ராஜாசர் முத்தையா செட்டியார் பெயர் சூட்ட வேண்டும்.
÷பேரவை நிறுவனத் தலைவர் சபா.சந்தானம் தலைமை வகித்தார். எஸ்.ராஜவேலு அறிக்கையை படித்தார்.
÷தலைவர் பாலு வரவேற்றார்.
நெய்வேலி முத்தழகன், ஸ்ரீமுஷ்ணம் சீனுவாசன், சீர்காழி சரவணக்குமார், புதுச்சேரி முத்தையன், பொருளர் எஸ்.அழகர்ராஜா, எஸ்.ராஜவேலு உள்ளிட்டோர் பேசினர். செயலர் எஸ்.கலியபெருமாள் நன்றி கூறினார்.