இந்தியன் வங்கி ரூ. 1.53 கோடி வசூல்

விழுப்புரம், ஜூலை 3: இந்தியன் வங்கியின் வாராக்கடனை வசூலிக்க சமரச தீர்வு முகாம் நடத்தப்பட்டதில் ஒரே நாளில் ரூ. 1.53 கோடி வசூலானது. விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுவையை உள்ளடக்கிய புதுவை மண்டலத்தில் உள
Published on
Updated on
1 min read

விழுப்புரம், ஜூலை 3: இந்தியன் வங்கியின் வாராக்கடனை வசூலிக்க சமரச தீர்வு முகாம் நடத்தப்பட்டதில் ஒரே நாளில் ரூ. 1.53 கோடி வசூலானது.

விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுவையை உள்ளடக்கிய புதுவை மண்டலத்தில் உள்ள 55 இந்தியன் வங்கி கிளைகளில் பல்வேறு கடன்களை பெற்று, திரும்ப செலுத்தாதவர்களுக்கு வட்டிச் சலுகைகள் அளித்து அவர்கள் கடனை அடைப்பதற்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொள்ள 6,251 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதில் 3,626 பேர் வங்கி அலுவலர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்தனர். முகாமில் 1090 பேர் நேரடியாக கலந்து கொண்டனர்.

இதில் 422 கடன்தாரர்களுக்கு ரூ. 4 கோடி அளவுக்கு சமரச தீர்வு அளிக்கப்பட்டு, ரூ. 1.53 கோடி ஒரே நாளில் வசூலானது.

 இந்த முகாமில் இந்தியன் வங்கியின் தலைமை அலுவலக பொது மேலாளர் மகாதேவன், புதுவை மண்டல பொது மேலாளர் உலகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.