திருக்கோவிலூர், ஜூலை 3: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஆ.சௌரிராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட கொளரவத் தலைவர் டி.ஆர்.ராம்நாத், கல் உடைக்கும் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.ராஜேந்திரன், ஓவியர் சங்க மாவட்டப் பொருளர் எம்.சிவராஜ், மாவட்ட துணைச் செயலர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் கே.சுப்பராயன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பெருந்துறை நா.பெரியசாமி, மாவட்டத் தலைவர்கள் சுரேஷ்மோகன், ஏ.வி.ஸ்டாலின்மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் வி.அர்ச்சுணன், மாவட்ட துணைச் செயலர் ஆ.இன்பஒலி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.