கடலூரில் ரயில்வே கேட் மூடல்: போக்குவரத்து பாதிப்பு

கடலூர், ஜூலை 3:  கடலூர் திருப்பாப்புலியூர் லாரன்ஸ் சாலை ரயில்வே கேட், பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதால், மக்கள் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ÷மயிலாடுதுறை- விழுப்புரம் மா
Published on
Updated on
1 min read

கடலூர், ஜூலை 3:  கடலூர் திருப்பாப்புலியூர் லாரன்ஸ் சாலை ரயில்வே கேட், பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதால், மக்கள் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

÷மயிலாடுதுறை- விழுப்புரம் மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளங்களைப் பழுது பார்த்து பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.

÷அதன் ஒரு பகுதியாக கடலூர் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் ஞாயிற்றுக்கிழமை காலை 8 முதல் இரவு 8 மணி வரை மூடப்பட்டு இருக்கும் என்று, ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

÷அதன்படி ரயில்வே கேட் மூடப்பட்டு, தண்டவாளங்களைப் பழுதுபார்க்கும் பணி நடந்தது.

÷கடலூர்- சிதம்பரம் சாலை பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்பட்டு வருகிறது. இதனால் அச்சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

÷அருகில் உள்ள பான்பரி மார்க்கெட்டில் உள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

÷இந்நிலையில் திருப்பாப்புலியூர் ரயில்வே கேட் மூடப்பட்டதால் லாரன்ஸ் சாலையில் போக்குவரத்து தடைபட்டது, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.