விழுப்புரம், ஜூலை 3: கல்லூரி மாணவரின் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் நடைபெற்றது.
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவர் விக்னேஷ் என்பவரின் "உச்சத்தின் மிச்சம்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் மாவட்டத் தலைவர் பக்கிரிசாமி நூலை வெளியிட, எழுத்தாளர் ஜீவகாருண்யன் பெற்றுக்கொண்டார். இந்த கவிதை நூல் குறித்து பேராசிரியர் மகாவிஷ்ணு உள்ளிட்டோர் பேசினர்.