மதுராந்தகம், ஜூலை 3: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதுராந்தகம் கிளையின் 14-வது மாநாடு மற்றும் கல்வி உரிமைச் சட்டம் குறித்த கருத்தரங்கம் மதுராந்தகத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு கிளைத் தலைவர் ஜெ. வேணுகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. ஸ்ரீதரன் வரவேற்றார். அறிவியல் இயக்க கிளை நிர்வாகி சங்கரதாஸ் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் குருசாத்ராக் இயக்கத்தின் செயல் அறிக்கையையும், பொருளாளர் திருக்குமரன் வரவு - செலவு அறிக்கையையும் வாசித்தனர். அதன் பின்னர், கல்வி உரிமைச் சட்டம் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மாதவன், மாவட்டச் செயலாளர் முனுசாமி, கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.