தனியார் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கள்ளக்குறிச்சி, ஜூலை 3: டாக்டர் ஆர்.கே. சண்முகம் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்த
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி, ஜூலை 3: டாக்டர் ஆர்.கே. சண்முகம் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் 94 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைவேந்தர் டி. பத்மநாபன் தலைமை வகித்து பேசுகையில், "ஆசிரியர் சமுதாயத்தின்மீது பலருக்கு மனதில் வருத்தம் உள்ளது. வகுப்பறையில் மாணவ மாணவிகளை தண்டிப்பது அடிப்பது போன்ற செயல்களால் வருத்தங்கள் உண்டாகின்றன. ஆசிரியர்களாக வருவதற்கு கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் காட்டும் வழிதான் கல்வியின் வெற்றி.

 ஆசிரியர்கள் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். நல்ல மதிப்புகளை நல்ல பண்புகளை சமுதாயத்தில் பெற வேண்டும். நல்ல பண்புகள் ஒழுக்கம், மதிப்பு இல்லையென்றால் ஆசிரியர் பதவிக்கு தகுதியற்றவர்களாக கருதப்படுவீர்கள்' என்றார்.

 நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் என். கோவிந்தராஜூலு முன்னிலை வகித்தார். கல்லூரியின் தலைவர் மருத்துவர் க. மகுடமுடி வரவேற்றார். தாளாளர் கே.பி.ஆர். பாலகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்.

 கல்வியில் கல்லூரி பொறுப்பு முதல்வர். கோவிந்தராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். ஆர்.கே.எஸ். கல்லூரி முதல்வர் முத்துவேலன் பேசினார்.  கல்லூரி இயக்குநர்கள் ம.நளினி, பா.ரவிசங்கர், அண்ணாமலை பல்கலைக்கழக துணை பதிவாளர் பாலு, முதுநிலை கண்காணிப்பாளர் மோகன், வழக்கறிஞர் கோகுல்தாஸ் மற்றும் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியை கல்லூரி துணை முதல்வர் சேதுமுருகன் தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.