காஞ்சிபுரம், ஜூலை 3: காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழ் மாணவர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட செயலர் சி. லெனின் பொற்செல்வன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் மு. பாலகுரு பங்கேற்று பேசினார். மாநில அமைப்பாளர் தென்திசை, மாவட்ட இளைஞர் பேரவை தலைவர் சசிகுமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
"நாடு கடந்த தமிழீழ அரசும், தமிழர்களின் கடமையும்' என்ற தலைப்பில் ஆகஸ்டு 19-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்பது குறித்தும், அதை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது குறித்தும் இக் கூட்டத்தில் கலந்தாய்வு செய்தனர்.