திருக்கோவிலூர், ஜூலை 3: திருக்கோவிலூரில் திமுக தலைவர் கருணாநிதி 88-வது பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் வழக்கறிஞர் எம்.தங்கம் தலைமை தாங்கினார். முகையூர் ஒன்றியச் செயலர் ஜி.ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் தலைமைப் பேச்சாளர்கள் கம்பம் செல்வேந்திரன், திருவண்ணாமலை ஜெயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இதில் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியச் செயலர் ச.துரைராஜ், அரகண்டநல்லூர் பேருராட்சித் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.அன்பு, திருக்கோவிலூர் பேரூராட்சி துணைத் தலைவர் மு.ஜானிபாஷா, முகையூர் ஒன்றிய துணைச் செயலர் ஏ.கே.லெனின்தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் நகரச் செயலர் டி.செல்வராஜ் நன்றி கூறினார்.