சிதம்பரம், ஜூலை 3: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு இந்து ஆலய பாதுகாப்பு குழுவினர் மற்றும் சிவனடியார்கள் கோயிலில் உழவாரப் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.
÷இந்து ஆலய பாதுகாப்புக் குழுத் தலைவர் குஞ்சிதபாதம், இந்து இயக்கங்களின் தலைவர் ஜோதி குருவாயூரப்பன், வழக்கறிஞர்கள் பாலசுப்பிரமணியன், கீதா, முத்துகணேசன் மற்றும் ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப்பள்ளி, ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள், தீயணைப்பு மீட்புத் துறையினர் ஆகியோர் இணைந்து கோயிலை சுத்தம் செய்து உழவாரப் பணியை மேற்கொண்டனர்.÷வருகிற ஜூலை 6, 7 தேதிகளில் நடராஜர் கோயிலில் உற்சவம் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபம் மற்றும் நடனப்பந்தல் ஆகியவற்றை நீர் பாய்ச்சி சுத்தம் செய்தனர்.