செஞ்சி, ஜூலை 3: செஞ்சி வட்டம் ஆர். நயம்பாடியில் உள்ள நிதி உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சீருடை, நோட்டு, பேனா, உள்ளிட்ட பொருள்கள் பள்ளி நிர்வாகி சடகோபன் சார்பில் வழங்கப்பட்டன.
70 பேருக்கு இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க தலைவர் லோக. ஜெயராமன் தலைமை தாங்கினார். செஞ்சி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கோவர்தணன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட பொருள்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் திருவள்ளுவன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் பி. வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் எம். தோமிஞ்சா, எம். செல்வி, பி. வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.