காஞ்சிபுரம், ஜூலை 3: மதிமுக தொடங்கப்பட்ட 18-வது ஆண்டு விழா காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கட்சியின் நகரச் செயலர் வளையாபாதி தலைமை தாங்கினார். இவ் விழாவையொட்டி 45 வார்டுகளிலும் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட நெசவாளர் அணி சேஷாத்திரி, அவைத் தலைவர் ஏகாம்பரம், இளைஞர் அணி துணை செயலர் எம்.சி.அருள், வி.கே. பொன்மொழி உள்ளிட்டோரும் ஏராளமான மதிமுக தொண்டர்களும் விழாவில் பங்கேற்றனர்.