விருத்தாசலம், ஜூலை 3: விருத்தாசலத்தில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சனிக்கிழமை தனியார் பஸ்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
÷தனியார் பஸ்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக விருத்தாசலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
÷தகவலின்பேரில் விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் புறவழிச்சாலை அருகே வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஜெயசந்திரன் தனியார் பஸ்களில் ஆய்வு செய்தார்.
÷அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இனிமேல் கூடுதல் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என எச்சரித்து அனுப்பினார்.
÷மேலும், பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்து, வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிவரக்கூடாது.
÷உரிய ஆவணங்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும்? என பள்ளி வாகன ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தினார்.