காஞ்சிபுரம், ஜூலை 9: காஞ்சிபுரம் ஒன்றிய முன்னாள் அவைத் தலைவர் எம்.குப்பன் படத்திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
÷இவர் கடந்த ஜூன் 24-ம் தேதி இறந்தார். குப்பன் படத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரம், சட்டத் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் திறந்து வைத்தார்.
÷இந் நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் சோமசுந்தரம், வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. திருத்தணி கோ.அரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
÷இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந் நிகழ்ச்சியில் மேளம் அடிக்கும் இடத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கூடியதால் புதிய ரயில்வே சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.