திருவள்ளூர், ஜூலை 9: திருவள்ளூர் முகமது அலி தெருவில் உள்ள கோலம் கொண்ட அம்மன் கோயில் திருவிழா தொடர்பான அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
திருவள்ளூர் முகமது அலி தெருவில் உள்ளது கோலம் கொண்ட அம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நடத்துவது தொடர்பாக அப்பகுதியில் உள்ள இரு தரப்பினரிடையே சர்ச்சை ஏற்பட்டது. இதனால் பிரச்னைகள் ஏற்பட்டதை அடுத்து நிர்வாகிகள் திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை திருவள்ளூர் டவுன இன்ஸ்பெக்டர் தயாளன், கோயில் செயல் அலுவலர் வள்ளுவன், ஆய்வாளர் கேசவ நாராயணன் ஆகியோர் மற்றும் கோவல் பிரச்னை தொடர்பாக இருதரப்பினருடன் அமைதி பேச்சுவார்ததை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து திருவிழாவை வெகு விமரிசையாக நடத்துவது என்றும், செயல் அலுவலர் வள்ளுவன் தலைமையிலும், கோவில் ஆய்வாளர் கேசவநாராயணன் முன்னிலையிலும் திருவிழாவை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர். திருவிழாவின் போது பிரச்னைகள் ஏற்பாடத வண்ணம் உரிய பாதுகாப்பு அளிப்பதாக இன்ஸ்பெக்டர் தயாளன் உறுதியளித்தார்.