மதுராந்தகம், ஜூலை 9: மதுராந்தகம் ஏரி நகர அரிமா சங்கம், தொன்மை நகர அரிமா சங்கத்தின் 2011-12-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் சேவை திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
÷ஏரி நகர அரிமா சங்க புதியத் தலைவராக ஜி.ஏ.சுதாகரன், செயலராக பி.தனபாண்டியன், பொருளராக பவித்ரா சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும், தொன்மை நகர அரிமா சங்கத்துக்கு தலைவராக எம்.தமிழ்மாறனும், செயலராக ஆர்.ராஜசேகரும், பொருளராக டி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் அரிமா சங்க துணை கவர்னர் (நிலை 2) எம்.எஸ்.முருகப்பா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
÷அதைத் தொடர்ந்து, 150 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் பள்ளிக்கு தளவாட பொருள்கள், விளையாட்டு சாதனங்கள், ஏழை மாணவர்களுக்கு ரூ.30 ஆயிரம் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவைகளை முன்னாள் மாவட்ட கவர்னர் மகேஷ் வழங்கினார்.