ஆதிதிராவிடர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை

விழுப்புரம், ஜூலை 9: ஆதிதிராவிடர் நல விடுதிகளில் இந்த கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கு மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் கா.த. மணிமேகலை த
Published on
Updated on
1 min read

விழுப்புரம், ஜூலை 9: ஆதிதிராவிடர் நல விடுதிகளில் இந்த கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கு மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் கா.த. மணிமேகலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் 66 மாணவர் விடுதிகளும், 25 மாணவியர் விடுதிகளும் இயங்கி வருகின்றன. விடுதி மாணவ, மாணவியர்களுக்கு இலவச உணவும், உறைவிடமும், பள்ளி விடுதிகளில் உள்ள 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயில்பவர்களுக்கு மாதிரி வினா வங்கி, சிறப்பு வழிகாட்டியும் அரசால் வழங்கப்படுகிறது.

இந்த விடுதிகளில் காலியாக உள்ள இடங்களில் சேரவிரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரவேற்கப்படுகின்றன.

விடுதிகளில் சேர விண்ணப்பப்படிவங்கள் அருகில் உள்ள விடுதி காப்பளர்களிடம் அல்லது தனிவட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலம்) விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

பள்ளி விடுதிகளில் சேர விரும்புவோர் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30-ம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் சேர விரும்புவோர் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள்ளும் சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். விடுதி வசதி கோரும் மாணவ, மாணவியரது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மேலும் விடுதிக்கும், வசிக்கும் இடத்திற்கும் குறைந்தபட்சம் 5 கி.மீ. குறையாமல் இருக்க வேண்டும். மாணவியர்களுக்கு இந்த தூர அளவு பொருந்தாது.

பள்ளி விடுதிகளில் நான்காம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.