எரிவாயு தகனமேடை அமைக்க திருமாவளவனிடம் கோரிக்கை

சிதம்பரம், ஜூலை 9: சிதம்பரம் நகரில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவனை கோயில் நகர அரி
Published on
Updated on
1 min read

சிதம்பரம், ஜூலை 9: சிதம்பரம் நகரில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவனை கோயில் நகர அரிமா சங்க நிர்வாகிகள் அண்மையில் நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

 அரிமா சங்க நிர்வாகிகள் லடன் கே.சேதுமாதவன், ஆர்.சரவணன், ஆர்.தீபக், டி.கே.விஜயகாந்த், கே.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த திருமாவளவனை சந்தித்து கடிதத்தை நேரில் அளித்தனர்.

 கடித விபரம்: சிதம்பரம் நகரில் 33 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்துக்கு மேலான மக்கள் வசித்து வருகின்றனர். நடராஜர் கோயில் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமையப் பெற்ற புகழ்பெற்ற நகரமாக சிதம்பரம் திகழ்கிறது. தற்போது நகர மக்களுக்காக 4 மயானங்கள் உள்ளன. அவை அனைத்தும் சுகாதாரமின்றியும், எவ்வித வசதியின்றியும் உள்ளன. எனவே பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு சிதம்பரம் அருகே உசூப்பூர் எல்லைக்குள் உள்ள புலிஸ்வரமேடு எனப்படும் மயானத்தில் நவீன எரிவாயு தகனமேடையுடன் கூடிய மயானத்தை அமைத்து தர வேண்டும் என கடிதத்தில் அரிமா சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.  கடிதத்தைப் பெற்ற திருமாவளவன் எரிவாயு தகனமேடை அமைக்க முழுமையான முயற்சியை மேற்கொள்வதாகக் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.