காஞ்சிபுரம், ஜூலை 9: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவசண்முகராஜா தெரிவித்தார்.
÷இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் வைத்துள்ளவர்களுக்கு ஜூலை 2011 மாதம் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
÷மாவட்ட தலைநகரம், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த அனைத்து புதிய ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இந்த மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்றார்.