செஞ்சி அரசு மருத்துவமனையில் முட்புதர்கள் செடிக் கொடிகளை தனது சொந்த செலவில் அகற்றிய எம்.எல்.ஏ.

செஞ்சி, ஜூலை 9: செஞ்சி அரசு மருத்துவமனையை சுற்றிலும் மண்டிக் கிடந்த முட்புதர்கள் மற்றும் செடிக் கொடிகளை தனது சொந்த செலவில் செஞ்சி எம்.எல்.ஏ.அ.கணேஷ்குமார் சனிக்கிழமை அகற்றினார். ÷செஞ்சி அரசு மருத்துவமன
Published on
Updated on
1 min read

செஞ்சி, ஜூலை 9: செஞ்சி அரசு மருத்துவமனையை சுற்றிலும் மண்டிக் கிடந்த முட்புதர்கள் மற்றும் செடிக் கொடிகளை தனது சொந்த செலவில் செஞ்சி எம்.எல்.ஏ.அ.கணேஷ்குமார் சனிக்கிழமை அகற்றினார்.

÷செஞ்சி அரசு மருத்துவமனையின் முன்புறமும், பின்புறமும் செடிக் கொடிகள் மற்றும் முட்புதர்கள் மண்டி இருந்தன.

÷இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிக்கள் நோயாளிகளின் வார்டில் படையெடுத்து வந்தன.

÷இந்நிலையில் மருத்துவமனையை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், மருத்துவமனையில் உள்ள முட்புதர்களை அகற்றுமாறு கூறினார்.

÷இதைத் தொடர்ந்து பெயரளவுக்கு செஞ்சி பேரூராட்சி, மருத்துவமனை முன் புறம் உள்ள செடிகளை அரை குறையாக அகற்றியது.

÷இந்நிலையில் புதன்கிழமை பார்வையிட்ட செஞ்சி எம்.எல்.ஏ.அ.கணேஷ்குமார் முட்புதர்கள் மருத்துவமனையை சூழ்ந்துள்ளதை கண்டு வேதனை தெரிவித்தார்.

÷பின்னர் தனது சொந்த செலவில் 50 ஆட்களை கொண்டு மருத்துவமனையை சுற்றி உள்ள அனைத்து புதர்களையும் அடியோடு அகற்றினார்.

÷தற்போது மருத்துவமனை வளாகம் செடிக் கொடிகள் இன்றி தூய்மையாக காட்சி அளிப்பதாக மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.