தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம்: துணை ஆணையர் திடீர் ஆய்வு

விருத்தாசலம், ஜூலை 9: விருத்தாசலத்தில் போக்குவரத்துத் துறை விழுப்புரம் சரக துணை ஆணையர் புதன்கிழமை தனியார் பஸ்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  போக்குவரத்துத்துறை விழுப்புரம் துணை ஆணையர் முருகானந்தம் வ
Published on
Updated on
1 min read

விருத்தாசலம், ஜூலை 9: விருத்தாசலத்தில் போக்குவரத்துத் துறை விழுப்புரம் சரக துணை ஆணையர் புதன்கிழமை தனியார் பஸ்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

 போக்குவரத்துத்துறை விழுப்புரம் துணை ஆணையர் முருகானந்தம் விருத்தாசலத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கடடுவதற்கான இடத்தை பார்வையிட்டார். பின்னர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது, கடலூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இந்தத்தகவலின்படி தனியார் பஸ்களை தணிக்கை செய்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், வேகமாக செல்லும் ஆம்னி வாகனங்கள், வரி செலுத்தாத வாகனங்கள் ஆகியவற்றை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

 பின்னர் விருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலை அருகே தனியார் பஸ்களில் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வில், அரசு நிர்ணயத்த கட்டணத்தொகையைவிட 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு மேல் அதிகமாக கட்டணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மீண்டும் பயணிகளிடம் வழங்குமாறு கூறி கூடுதல் தொகையை பயணிகளிடம் பெற்றுத்தந்தார்.  ஆய்வின்போது பறக்கும்படை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வேல்முருகன், விருத்தாசலம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.