சிதம்பரம், ஜூலை 9: காட்டுமன்னார்கோவில் அருகே சதுர்வேதமங்கலத்தில் (குப்பங்குழி) அமைந்துள்ள ஸ்ரீமந்நாதமுனிகள், ஸ்ரீஆளவந்தார் அவதார ஸத்ல திருமாளிகையில் நாதமுனிகள் அவதார ஜெனன மஹோற்சவம் ஜூலை 10-ம் தேதி தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஜூலை 10-ம் தேதி மாலை திருக்கல்யாணம், 11-ம் தேதி சந்நிதியிலிருந்து ஸ்ரீமந் நாதமுனிகள் திருமாளிகைக்கு எழுந்தருளி மங்களாசாசனம் திருப்பல்லாண்டு தொடக்கம், ஜூலை 12, 13, 14, 15 தேதிகளில் திவ்ய பிரபந்த சேவை சாற்றுமுறை நிகழ்ச்சி, 16-ம் தேதி சனிக்கிழமை காலை திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை சாற்றுமுறை நிகழ்ச்சி, மங்களாசாசனம் நிகழ்ச்சி. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் எஸ். ஸ்ரீனிவாச நாராயணன் செய்துள்ளார்.