பூரண மதுவிலக்கு உறுதிமொழி ஏற்ற கிராம மக்கள்

திருவள்ளூர், ஜூலை 9: திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் பூரண மதுவிலக்கை கடைபிடிப்போம் என கிராம மக்கள் உறுதிமொழி ஏற்றனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வடக்க
Published on
Updated on
1 min read

திருவள்ளூர், ஜூலை 9: திருவள்ளூர் மாவட்டத்தில் கிராமப் புறங்களில் பூரண மதுவிலக்கை கடைபிடிப்போம் என கிராம மக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வடக்கு மண்டல ஐஜி சி. சைலேந்திரபாபுவின் உத்தரவின் பேரில், டிஐஜி ஆர். திருஞானம் அறிவுரையின் பேரில் மாவட்ட எஸ்பி வி. வனிதா தலைமையில் கிராமப்புறங்களில் தீவிர கள்ளச்சாராய வேட்டை நடைபெற்று

வருகிறது.

 இந்நிலையில் குத்தம்பாக்கம் வடபகுதி, தென் பகுதி மற்றும் உட்கோட்டை கிராமங்களில் கள்ளச் சாராய தொழிலில் ஈடுபட்டிருந்து, அத்தொழிலை முழுவதுமாக விட்டுவிட்டு திருந்தி வாழ விரும்புவர்கள் 150 பேரை ஒருங்கிணைத்து அவர்கள் மறுவாழ்வு பெற வழி செய்ய வேண்டும் என குத்தம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளஙகோவன் மாவட்ட எஸ்பி வி. வனிதாவிடம் கூறினார்.

 இதையடுத்து திருவள்ளூர் டிஎஸ்பி பாலச்சந்திரன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு கூட்டம் நடத்த எஸ்பி வி. வனிதா உத்தரவிட்டார். இதையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன் தலைமையில் வந்த 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இனிமேல் கள்ளச்சாராய தொழிலில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்தனர்.

 மேலும் தங்களது மறு வாழ்வுக்கு வழி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில திருவள்ளூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி. ஹரி (மதுவிலக்கு) மற்றும் வெள்ளவேடு போலீஸôர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.