கும்மிடிப்பூண்டி, ஜூலை 9: கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரியபாளையத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. சி.எச். சேகர் தனது அலுவலகத்தை திறந்துள்ளார்.
பொதுமக்கள் தன்னை எளிதில் சந்திக்கும் பொருட்டு கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், பூண்டி ஆகிய பகுதியில் எம்.எல்.ஏ. சி.எச். சேகர் அலுவலகங்களை திறந்துள்ளார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் பகுதியில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடபெற்ற எம்.எல்.ஏ அலுவலகம் திறப்பு விழாவிற்கு சி.எச். சேகர் தலைமை தாங்கி அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில் எல்லாபுரம் ஒன்றிய தே.மு.தி.க செயலாளர் விஜயபிரசாத், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், ஞானமூர்த்தி, சரவணன், ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், நீதி உள்பட தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை பெரியபாளையத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. சி.எச். சேகர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.