போதிய ரயில்பெட்டிகள் வந்ததும் விழுப்புரம் - வேலூர் இடையே ரயில் இயக்கப்படும்

விழுப்புரம், ஜூலை 9:  போதிய ரயில்பெட்டிகள் வந்ததும் விழுப்புரம் - வேலூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியநாதன் சனிக்கிழமை தெரிவித்தார். ÷விழுப்புரம் ரயில்
Published on
Updated on
1 min read

விழுப்புரம், ஜூலை 9:  போதிய ரயில்பெட்டிகள் வந்ததும் விழுப்புரம் - வேலூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் வைத்தியநாதன் சனிக்கிழமை தெரிவித்தார்.

÷விழுப்புரம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்த அவர் நிருபர்களிடம் கூறியது:

÷திருச்சிக்கு அடுத்த மிக முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையமாக விழுப்புரம் மாறி வருகிறது.

÷இங்கு 5 வழிப்பாதைகள் இயங்குகிறது. திருச்சி, மயிலாடுதுறை, புதுவை, வேலூர், சென்னை ஆகிய 5 வழித்தடங்களில் ரயில்கள் செல்கின்றன. எனவே இங்கு புதிதாக 3 நடைபாதைகளின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன.

÷அடிப்படை வசதிகள் செய்வது தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தவே வந்துள்ளேன்.

÷திருவாரூர், நாகப்பட்டினத்தில் உள்ளதுபோல் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைகளில் குளிர்சாதன வசதி, சாதாரண வசதி கொண்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ÷விழுப்புரத்தின் நிலைக்கேற்ப வாடகை நிர்ணயம் செய்யப்படும்.

÷மேலும் ரயில் நிலையத்தில் தகவல் ஒலிபரப்பு வசதிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. விழுப்புரம் வேலூர் ரயில்பாதை நன்றாகவும், தரமானதாகவும் உள்ளது.

÷ஆனால் ரயில் பெட்டிகள் இல்லாததால் ரயில்விட தாமதம் ஏற்படுகிறது. இவ்வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால், செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே இருவழிப்பாதைப் பணிகள் வேகமாக நடக்கும்.

÷விழுப்புரம் - திருச்சி இடையே காலை 6.30 மணிக்கு இயக்கப்பட்ட ரயிலில் போதிய பயணிகள் வராததால் அது நிறுத்தப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.