கும்மிடிப்பூண்டி, ஜூலை 9: கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
பாதிரிவேடு மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்வி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.
பாதிரிவேடு ஊராட்சி மன்ற தலைவர் சாரதா தியாகராயம், ஒன்றிய கவுன்சிலர் சாயிலட்சுமி ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஈஸ்வரையா வரவேற்புரை நிகழ்த்தினார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சி மன்ற துணை தலைவர் வீரபத்திரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஏகாம்பரகுப்பம் லயன் கே.சி. கிரிவாசன் மற்றும் ஆர்.கே. பேட்டை கோவிந்தராஜ், கோபால் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த கல்வி ஆண்டில் பள்ளியில் சிறந்த மாணவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 60 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் 300 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினர். விழாவில் கும்மிடிப்பூண்டி வட்ட தொடக்க கல்வி அலுவலர் சதீஷ்குமார், உதவித் தொடக்கல்வி அலுவலர் ஜெயபாலன், எஸ்.எஸ்.ஏ. மேற்பார்வையாளர் குமாரசாமி, தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் முத்துகிருஷ்ணடு, கோபால், மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் தயாளன், சமூக சேவகர் ஜே. அலெக்ஸôண்டர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா முடிவில் பள்ளி ஆசிரியர் எம். சண்முகம் நன்றியுரை வழங்கினார்.