திண்டிவனம், ஜூலை 9: திண்டிவனம் தேசிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ரயில் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்த விளக்கம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது (படம்).
தேசிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவர்கள் 100-க்கும் மேற்ப்பட்டோருக்கு திண்டிவனம் ரயில் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கான விளக்கங்களை ரயில் நிலைய தலைமை அலுவலர்கள் தண்டபாணி மற்றும் முருகன் ஆகியோர் அளித்தனர்.
நிகழ்ச்சியின் போது பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதி வாசு,கூடுதல் உதவி தொடக்கல்வி அலுவலர் அப்பாண்டைராஜ் மற்றும் ஆசிரியர்கள் காஞ்சனாரவி,சிவகாமி, ராஜ்குமார், வெங்கடேசன், புனிதா ஆகியோர் உடனிருந்தனர்.